Home » சட்டம் & அரசியல் » பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் ஜமாலி மரணம்

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் ஜமாலி மரணம்

சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் மாலை மரணம் அடைந்தார்.

👤 Sivasankaran4 Dec 2020 5:00 PM GMT
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் ஜமாலி மரணம்
Share Post

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மிர் ஜபருல்லாகான் ஜமாலி (வயது 76).

இவர் பர்வேஸ் முஷரப் அதிபராக இருந்தபோது, 2002-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ந் தேதி தொடங்கி 2004-ம் ஆண்டு ஜூன் 26-ந் தேதி வரை பிரதமர் பதவி வகித்தார்.

இவர் மாரடைப்பு காரணமாக ராவல்பிண்டி ராணுவ ஆஸ்பத்திரியில் கடந்த வாரம் சேர்க்கப்பட்டார். கடந்த சில நாட்களாக அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் மாலை மரணம் அடைந்தார்.