Home » சட்டம் & அரசியல் » விவசாயிகள் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் ஆதரவு

விவசாயிகள் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் ஆதரவு

கனடா பிரதமரின் கருத்துக்காக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

👤 Sivasankaran6 Dec 2020 9:17 AM GMT
விவசாயிகள் போராட்டத்துக்கு  கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் ஆதரவு
Share Post

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுபற்றி கருத்து தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, அமைதியான போராட்டம் நடத்தும் உரிமையை கனடா எப்போதும் ஆதரிக்கும் என்று கூறினார்.

இதையடுத்து, இந்தியாவுக்கான கனடா தூதரிடம் கனடா பிரதமரின் கருத்துக்காக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

உலகின் எந்த மூலையிலும் நடைபெறும் அமைதியான போராட்டத்திற்கு கனடா துணை நிற்கும். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என ட்ருடோ தெரிவித்தார்.