Home » சட்டம் & அரசியல் » இந்திய பாதுகாப்பு செயலாளருடன் சம்பந்தன் சந்திப்பு

இந்திய பாதுகாப்பு செயலாளருடன் சம்பந்தன் சந்திப்பு

அந்த இரகசியக் கூட்டத்தில், இரா.சம்பந்தன் தனியாகக் கலந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

👤 Sivasankaran7 Dec 2020 9:29 AM GMT
இந்திய பாதுகாப்பு செயலாளருடன் சம்பந்தன் சந்திப்பு
Share Post

கடந்த 27.11.2020 அன்று இலங்கை வந்திருந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் இரகசியப் பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

எந்தவித முன்னறிவித்தலும் இன்றி 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்திய உயர் ஸ்தானிகரின் இல்லத்தில் சுமார் 30 நிமிடங்கள் மாத்திரமே நடைபெற்ற அந்த இரகசியக் கூட்டத்தில், இரா.சம்பந்தன் தனியாகக் கலந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்தக் கூட்டம் நடைபெற்றதை ஒப்புக்கொண்ட சம்பந்தன், 'அஜித் டோவால் இலங்கையின் அபிவிருத்தி பற்றியும், வடக்கு கிழக்கு அபிவிருத்தி பற்றியும் தன்னுடன் பேசியதாகத்' தெரிவித்திருந்தார்.