Home » சட்டம் & அரசியல் » தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குமாறு நீதிமன்றில் வழக்குத் தொடர முடியும்: மனோ கணேசன்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குமாறு நீதிமன்றில் வழக்குத் தொடர முடியும்: மனோ கணேசன்

நீதிமன்றில் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குமாறு கோர முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

👤 Sivasankaran8 Dec 2020 4:00 PM GMT
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குமாறு நீதிமன்றில் வழக்குத் தொடர முடியும்: மனோ கணேசன்
Share Post

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குமாறு சிறிலங்கா நீதிமன்றில் வழக்குத் தொடர முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டம் குறித்து மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டவர்கள் சட்டத்தரணிகள் என்பதனால் அவர்கள் நீதிமன்றில் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குமாறு கோர முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கம் எனவும், அவ்வாறானவர்களை நினைவு கூர்வதற்கு அனுமதியில்லை என்ற போதிலும் தங்களது உயிரிழந்த மகன், கணவன், சகோதரனை நினைவு கூர்வதற்கு மக்களுக்கு உரிமையுண்டு என அவர் தெரிவித்துள்ளார்.