Home » சட்டம் & அரசியல் » சிறைச்சாலையை நிர்மாணிப்பதற்கு சிறிலங்கா சீனாவுடன் பேச்சுவார்த்தை

சிறைச்சாலையை நிர்மாணிப்பதற்கு சிறிலங்கா சீனாவுடன் பேச்சுவார்த்தை

சுமார் 250 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

👤 Sivasankaran10 Dec 2020 9:17 AM GMT
சிறைச்சாலையை நிர்மாணிப்பதற்கு சிறிலங்கா சீனாவுடன் பேச்சுவார்த்தை
Share Post

சிறைச்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு சிறிலங்கா சீனாவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருக்கிறது எனச் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

புதிய சிறைச்சாலை முழுமையான பல வசதிகளுடன் அமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார் .

இதேவேளை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை மாற்று இடம் ஒன்றிற்கு நகர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் எந்த இடத்திற்கு வெலிக்கடை சிறைச்சாலை மாற்றப்படுமென்பதைக் குறித்துக் குறிப்பிடவில்லை.

இந்த திட்டத்திற்காக சுமார் 250 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய சிறைச்சாலையில் விளக்கமறியல், புனர்வாழ்வு மற்றும் தொழில்நுட்ப பயிற்சி வகை அளிக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த குறிப்பிட்டுள்ளார்.