Home » சட்டம் & அரசியல் » தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம்! பிரதமர் வழங்கியுள்ள வாக்குறுதி

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம்! பிரதமர் வழங்கியுள்ள வாக்குறுதி

15 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாகக் கையெழுத்திட்டுக் கடிதம் எழுதியுள்ளனர்.

👤 Sivasankaran11 Dec 2020 1:05 PM GMT
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம்! பிரதமர் வழங்கியுள்ள வாக்குறுதி
Share Post

"தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ள வேண்டுகோள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் நேரில் பேசி தீர்க்கமான முடிவொன்றை விரைவில் எடுப்போம்." இவ்வாறு உறுதியளித்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் காலம் தாழ்த்தாது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு 15 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாகக் கையெழுத்திட்டுக் கடிதம் எழுதியுள்ளனர்.

அந்தக் கடிதம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடனான நேற்றைய சந்திப்பின்போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கையளிக்கப்பட்டது. அதன்பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.