Home » சட்டம் & அரசியல் » உயர் பதவிகளில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆதரவாளர்கள்: ரஞ்சித் மத்தும பண்டார

உயர் பதவிகளில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆதரவாளர்கள்: ரஞ்சித் மத்தும பண்டார

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயத்தை கூறினார்.

👤 Sivasankaran12 Dec 2020 4:04 PM GMT
உயர் பதவிகளில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆதரவாளர்கள்: ரஞ்சித் மத்தும பண்டார
Share Post

கோட்டாபய அரசின் ஆட்சியில் சுயாதீன ஆணைக்குழுக்கள் யாவும் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

உயர் பதவிகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்களே நியமிக்கப்பட்டுள்ளதால் ஜனநாயகமும், மக்களின் உரிமைகளும் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.