Home » சட்டம் & அரசியல் » ஜோ பைடனுக்கு எதிராக டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம்

ஜோ பைடனுக்கு எதிராக டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம்

ஜோ பைடனின் வெற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

👤 Sivasankaran13 Dec 2020 11:38 AM GMT
ஜோ பைடனுக்கு எதிராக டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம்
Share Post

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் டிரம்ப் ஆதரவாளர்கள் ஜோ பைடனின் ஜனநாயக கட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இன்று திரண்ட டிரம்ப் ஆதரவாளர்கள், ஜோ பைடனின் வெற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

'தேர்தல் வாக்குகளை திருடாதீர்கள்' என்று முழக்கங்களை எழுப்பியபடி அவர்கள் பேரணி நடத்தினர். இந்நிலையில் அங்கு ஜோ பைடனின் ஆதரவாளர்கள் திரண்டு வந்து கோஷங்களை எழுப்பியதால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். தொடர்ந்து ஜார்ஜியா, பென்சில்வேனியா, மிச்சிகன், அரிசோனா உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.