Home » சட்டம் & அரசியல் » ஹெல உறுமயவில் இருந்து விலகினார் சம்பிக்க!

ஹெல உறுமயவில் இருந்து விலகினார் சம்பிக்க!

ஹெல உறுமய கட்சியில் இருந்து விலகுவதாக சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

👤 Sivasankaran13 Dec 2020 11:55 AM GMT
ஹெல உறுமயவில் இருந்து விலகினார் சம்பிக்க!
Share Post

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியின் உறுப்பினர் நிலையில் இருந்தும், முன்னாள் அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

புதிய அரசியல் மற்றும் சமூக சக்தியைக் கட்டியெழுப்பும் வகையில், ஹெல உறுமய கட்சியில் இருந்து விலகுவதாக சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர்கள் சந்திப்பில் அந்தக் கட்சியின் மேலும் பல முக்கிய உறுப்பினர்களும் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

இதையடுத்து புதிய தலைவர் பொதுச் செயலாளர் ஆகியோர் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினர்களின் ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டுள்ளது.