Home » சட்டம் & அரசியல் » அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பதவி விலகுவார் - அதிபர் டிரம்ப்

அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பதவி விலகுவார் - அதிபர் டிரம்ப்

கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் தனது பதவியில் இருந்து விலகுவார் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

👤 Sivasankaran15 Dec 2020 6:07 PM GMT
அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பதவி விலகுவார் - அதிபர் டிரம்ப்
Share Post

ஆட்சி மாற்ற பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் (தலைமை சட்ட அதிகாரி) வில்லியம் பெர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் தனது பதவியில் இருந்து விலகுவார் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதிபர் டிரம்பின் விசுவாசியாக கருத்தப்பட்ட அட்டர்னி ஜெனரல் வில்லியம் பெர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தலில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை என கூறினார். இதனால், டிரம்பிற்கும் வில்லியமிற்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. தற்போது வில்லியம் தனது பதவியை ராஜினாமா செய்வார் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.