Home » சட்டம் & அரசியல் » கோட்டாபய ராஜபக்சவும், சவேந்திர சில்வாவும் பொறுப்புகூற வேண்டியவர்கள்

கோட்டாபய ராஜபக்சவும், சவேந்திர சில்வாவும் பொறுப்புகூற வேண்டியவர்கள்

154 சிங்களவர்கள் காணாமற் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

👤 Sivasankaran16 Dec 2020 4:50 PM GMT
கோட்டாபய ராஜபக்சவும்,  சவேந்திர சில்வாவும் பொறுப்புகூற வேண்டியவர்கள்
Share Post

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவும், காணாமற்போன நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் குறித்து சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்டத்தின் படி பொறுப்புகூற வேண்டியவர்கள் என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் அறிவித்துள்ளது.

காணாமற்போனவர்கள் பற்றிய அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி இறுதிக் கட்டப் போரில் 330 தமிழர்களும் 1989 இன் இறுதிக் காலாண்டுப் பகுதியில் 154 சிங்களவர்கள் காணாமற் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் காணாமற்போனவர்கள் பற்றிய இந்த அலுவலகத்தின் அறிக்கையில் பெரியளவில் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளன என்றும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது, எங்கு இருக்கின்றார்கள் என்ற உண்மையைக் கண்டறிவதற்கான உரிமை குடும்பங்களுக்கு உண்டு என குறித்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.