Home » சட்டம் & அரசியல் » அமெரிக்கத் துணை அதிபர் நாளை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வார்

அமெரிக்கத் துணை அதிபர் நாளை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வார்

மைக் பென்ஸ் நாளை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள உள்ளார்.

👤 Sivasankaran17 Dec 2020 6:28 AM GMT
அமெரிக்கத் துணை அதிபர் நாளை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வார்
Share Post

அமெரிக்க மக்களுக்கு கொரோனா தடுப்பூசி மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வகையிலும், தடுப்பூசி பாதுகாப்பானது தான் என்பதை நிரூபிக்கும் வகையிலும் அந்நாட்டுத் துணை அதிபரான மைக் பென்ஸ் நாளை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள உள்ளார் என வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது.

மைக் பென்ஸ் உடன் இணைந்து அவரது மனைவி கரீன் பென்சும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளார்.

துணை அதிபர் செய்தியாளர்கள் முன்னிலையில் பொதுவெளியில் வைத்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளார் என வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது.