Home » சட்டம் & அரசியல் » சிறுபான்மை மக்களின் மத உரிமைக்கு மதிப்பளிக்குமாறு கோரி மன்னாரில் போராட்டம்!

சிறுபான்மை மக்களின் மத உரிமைக்கு மதிப்பளிக்குமாறு கோரி மன்னாரில் போராட்டம்!

மக்கள் அமைதியான முறையில் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

👤 Sivasankaran17 Dec 2020 6:45 AM GMT
சிறுபான்மை மக்களின் மத உரிமைக்கு மதிப்பளிக்குமாறு கோரி மன்னாரில் போராட்டம்!
Share Post

சிறுபான்மை இன மக்களின் மத உரிமைக்கு மதிப்பளிக்குமாறுக் கோரி மன்னாரில் அமைதியான முறையில் போராட்டம் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் (மெசிடோ) ஏற்பாட்டில், வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக குறித்த விழிப்புணர்வு போராட்டம் இடம் பெற்றது.

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று காலை ஒன்று கூடிய மக்கள் அமைதியான முறையில் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டத்திற்கு மன்னாரின் இளம் சட்டத்தரணிகள் ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டதோடு, நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகர சபையின் உப தலைவர் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.