Home » சட்டம் & அரசியல் » தலிபான் பேச்சுவார்த்தை குழுவைச் சந்தித்த அமெரிக்கத் தளபதி

தலிபான் பேச்சுவார்த்தை குழுவைச் சந்தித்த அமெரிக்கத் தளபதி

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

👤 Sivasankaran18 Dec 2020 3:49 PM GMT
தலிபான் பேச்சுவார்த்தை குழுவைச் சந்தித்த அமெரிக்கத் தளபதி
Share Post

ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே கத்தார் நாட்டில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பேச்சுவார்த்தையின் முக்கிய பகுதியாக ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் இருந்து அமெரிக்க படைகள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.

அமெரிக்க படையினர் வெளியேறி வருவதால் கடந்த சில வாரங்களாக ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவின் மும்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் மார்க் மில்லி கடந்த செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படாத பயணமாக கத்தார் நாட்டிற்கு சென்றார்.

அங்கு தோஹா நகரில் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் தலிபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளை ஜெனரல் மார்க் ரகசியமாக சந்தித்தார். பின்னர் அவர் ஆப்கானிஸ்தான் பயணம் மேற்கொண்டார்.