Home » சட்டம் & அரசியல் » இந்தியத் தூதுவருடன் கொழும்பில் சம்பந்தன் குழு முக்கிய பேச்சு!

இந்தியத் தூதுவருடன் கொழும்பில் சம்பந்தன் குழு முக்கிய பேச்சு!

கூட்டமைப்பின் உயர்மட்டத் தலைவர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

👤 Sivasankaran19 Dec 2020 2:18 PM GMT
இந்தியத் தூதுவருடன் கொழும்பில் சம்பந்தன் குழு முக்கிய பேச்சு!
Share Post

சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயை இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

கொழும்பிலுள்ள இந்தியத் தூதர் அலுவலகத்தில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பில் கூட்டமைப்பின் உயர்மட்டத் தலைவர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரம், இந்தச் சந்திப்பில் பேசப்பட்டவற்றைப் பகிரங்கப்படுத்துவதில்லை என்றும் இரு தரப்பினரும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழர் விவகாரம், பொருளாதார, அரசியல் விடயங்கள் குறித்து முக்கியமாக இதன்போது பேசப்பட்டுள்ளது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.