Home » சட்டம் & அரசியல் » ஜெனிவாவில் சிறிலங்காவின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் புதிய பிரேரணை - வரவேற்கிறார் சித்தார்த்தன்!

ஜெனிவாவில் சிறிலங்காவின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் புதிய பிரேரணை - வரவேற்கிறார் சித்தார்த்தன்!

சிறிலங்காவின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி புதிய பிரேரணையொன்றே வலுவானதாக கொண்டு வரப்பட வேண்டும்

👤 Sivasankaran19 Dec 2020 2:21 PM GMT
ஜெனிவாவில் சிறிலங்காவின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் புதிய பிரேரணை - வரவேற்கிறார் சித்தார்த்தன்!
Share Post

ஜெனீவா கூட்டத்தொடரின் போது சிறிலங்காவின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி புதிய பிரேரணையொன்றே வலுவானதாக கொண்டு வரப்பட வேண்டும் என்ற யோசனையை அமெரிக்கா முன்வைத்தமை வரவேற்கத்தக்கது என்று புளொட் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அந்த தீர்மானம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள 30/1 தீர்மானத்தினை விடவும் வலுவானதாக அமையவதாக இருந்தால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தமிழ்த் தேசியத் தரப்புக்களும் ஒன்றிணைந்து பரிந்துரைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.