Home » சட்டம் & அரசியல் » முஸ்லிம்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாகச் சந்திரிகா குற்றச்சாட்டு

முஸ்லிம்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாகச் சந்திரிகா குற்றச்சாட்டு

மார்க்க வழிமுறைகளை மாற்றக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

👤 Sivasankaran21 Dec 2020 2:14 PM GMT
முஸ்லிம்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாகச் சந்திரிகா குற்றச்சாட்டு
Share Post

கொவிட்-19 தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்கள் பின்பற்றி வரும் மார்க்க வழிமுறைகளை மாற்றக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

யாருக்கும் தீங்கு ஏற்படாத வகையில் முஸ்லிம்கள் தங்களது சமய மரபுகளை பின்பற்றுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமெனவும், முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குவதில் தவறில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.