Home » சட்டம் & அரசியல் » முஸ்லிம் தேசிய ஒளிபரப்பை உடன் தடை செய்யவேண்டும்! - ஞானசார தேரர் முறையீடு

முஸ்லிம் தேசிய ஒளிபரப்பை உடன் தடை செய்யவேண்டும்! - ஞானசார தேரர் முறையீடு

முஸ்லிம் தேசிய ஒளிபரப்பை உடனடியாகத் தடைசெய்யப் பொதுபலசேனா கோரியுள்ளது.

👤 Sivasankaran22 Dec 2020 7:40 AM GMT
முஸ்லிம் தேசிய ஒளிபரப்பை உடன் தடை செய்யவேண்டும்! - ஞானசார தேரர் முறையீடு
Share Post

இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒரு பிரிவாகச் செயற்பட்டு வருகின்ற முஸ்லிம் தேசிய ஒளிபரப்பை உடனடியாகத் தடைசெய்யப் பொதுபலசேனா கோரியுள்ளது.

பொதுபலசேனா அமைப்பு, ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் இன்று கோரிக்கையை விடுத்துள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த பொதுச்செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர், கொழும்பிலுள்ள ஊடக அமைச்சகத்திடம் இந்த முறைப்பாட்டை வழங்கியுள்ளார்.