Home » சட்டம் & அரசியல் » மோடிக்கு அமெரிக்காவின் லீஜியன் ஆப் மெரிட் விருது

மோடிக்கு அமெரிக்காவின் லீஜியன் ஆப் மெரிட் விருது

பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று வழங்கினார்.

👤 Sivasankaran23 Dec 2020 6:45 AM GMT
மோடிக்கு அமெரிக்காவின் லீஜியன் ஆப் மெரிட் விருது
Share Post

அமெரிக்காவால் பிற நாடுகள் மற்றும் அரசாங்கங்களின் தலைவர்களுக்கு 'லீஜியன் ஆப் மெரிட்' என்ற விருது வழங்கப்படுகிறது. இது உயரிய கவுரவ ராணுவ விருதுகளில் ஒன்றாகும்.

இந்த விருதை இந்தியப் பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று வழங்கினார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையனிடம் இருந்து மோடி சார்பில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜித்சிங் சாந்து பெற்றுக்கொண்டார்.

இந்திய–அமெரிக்க ராணுவ உறவை அதிகரிக்க முக்கிய பங்காற்றிய மோடியின் தலைமையை அங்கீகரிக்கும் வகையில், இந்த விருது வழங்கப்பட்டதாக ராபர்ட் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.