Home » சட்டம் & அரசியல் » பிரபாகரனின் படத்தை வெளியிட்ட 'உதயன்' மீது பயங்கரவாத வழக்கு!

பிரபாகரனின் படத்தை வெளியிட்ட 'உதயன்' மீது பயங்கரவாத வழக்கு!

இந்த வழக்கு மார்ச் 21 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

👤 Sivasankaran25 Dec 2020 10:53 AM GMT
பிரபாகரனின் படத்தை வெளியிட்ட உதயன் மீது பயங்கரவாத வழக்கு!
Share Post

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாளன்று அவரது புகைப்படத்தை வெளியிட்ட உதயன் பத்திரிகைக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் காவல்துறையால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் காவல் நிலைய பொறுப்பதிகாரி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு மார்ச் 21 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவரது படத்தையும், சொற்களையும் பிரசுரித்தமை பயங்கரவாத தடை சட்டத்திற்கு உட்பட்ட குற்றம் என்று தெரிவித்தே இந்த வழக்கு தாக்கலாகியுள்ளது.