Home » சட்டம் & அரசியல் » திரையரங்குகளை ஜனவரி முதலாம் திகதி முதல் திறப்பதற்கு பிரதமர் அறிவுறுத்தல்!

திரையரங்குகளை ஜனவரி முதலாம் திகதி முதல் திறப்பதற்கு பிரதமர் அறிவுறுத்தல்!

தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு மதிப்பளித்து திரையரங்குகள் திறக்கப்பட வேண்டும்

👤 Sivasankaran28 Dec 2020 12:55 PM GMT
திரையரங்குகளை ஜனவரி முதலாம் திகதி முதல் திறப்பதற்கு பிரதமர் அறிவுறுத்தல்!
Share Post

சுகாதார வழிகாட்டல்களுக்கு ஏற்ப ஜனவரி முதலாம் தேதி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள திரையரங்குகளைத் திறப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச அனுமதியளித்துள்ளார்.

அதற்கமைய தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களிலுமுள்ள திரையரங்குகள் ஜனவரி முதலாம் தேதி முதல் திறக்கப்படும்.

திரையரங்குகள் மூடப்பட்டுள்ளமையினால் கலைக்கும், கலைஞர்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் திரைப்பட தயாரிப்பாளர்கள், திரைப்பட இயக்குநர்கள் மற்றும் திரைப்பட கண்காட்சியாளர்கள் சங்கம் உள்ளிட்ட கலைஞர்கள் பலர் சமீபத்தில் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு மதிப்பளித்து திரையரங்குகள் திறக்கப்பட வேண்டும் என பிரதமர் ஆலோசனை வழங்கினார்.