Home » சட்டம் & அரசியல் » திபெத்தின் தலாய்லாமா தேர்வில் சீனாவின் தலையீட்டை தடுக்கும் சட்டத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார்

திபெத்தின் தலாய்லாமா தேர்வில் சீனாவின் தலையீட்டை தடுக்கும் சட்டத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார்

இந்த மசோதா ஜனாதிபதி டிரம்ப் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

👤 Sivasankaran29 Dec 2020 1:09 PM GMT
திபெத்தின் தலாய்லாமா தேர்வில் சீனாவின் தலையீட்டை தடுக்கும் சட்டத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார்
Share Post

சீனாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 'திபெத் கொள்கை மற்றும் ஆதரவு சட்டம் 2020' என்கிற சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த மசோதா ஜனாதிபதி டிரம்ப் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் டிரம்ப் நேற்று அந்த மசோதாவில் கையெழுத்திட்டார். இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம் திபெத்தின் அடுத்த தலாய்லாமாவை சீனாவின் குறுக்கீடு இல்லாமல் புத்த சமூகத்தினர் மட்டுமே தேர்வு செய்வதை உறுதிப்படுத்துவதாகும்.