Home » சட்டம் & அரசியல் » கோட்டாபய அரசு திருந்தாவிடின் புதிய ஆண்டில் கவிழ்வது உறுதி! சஜித் அணி பகிரங்க எச்சரிக்கை

கோட்டாபய அரசு திருந்தாவிடின் புதிய ஆண்டில் கவிழ்வது உறுதி! சஜித் அணி பகிரங்க எச்சரிக்கை

ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையும் அற்றுப்போகும் என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.

👤 Sivasankaran29 Dec 2020 1:13 PM GMT
கோட்டாபய அரசு திருந்தாவிடின் புதிய ஆண்டில் கவிழ்வது உறுதி! சஜித் அணி பகிரங்க எச்சரிக்கை
Share Post

2021ஆம் ஆண்டிலாவது கோட்டாபய அரசு திருந்த வேண்டும். நாட்டை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் இந்த அரசு புதிய ஆண்டில் கவிழ்வது உறுதி என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

பலருக்கும் தொழில் வாய்ப்புக்களும் அற்றுப்போயுள்ளன. இதேபோக்கில் வெளிநாட்டு கொள்கைகளிலும் நாடு முறையற்ற விதத்தில் செல்லுமாயின் எதிர்காலத்தில் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையும் அற்றுப்போகும் என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.