Home » சட்டம் & அரசியல் » கமல் குண்ரத்னவும் சவேந்திர சில்வாவும் ஜெனரலாகின்றனர்

கமல் குண்ரத்னவும் சவேந்திர சில்வாவும் ஜெனரலாகின்றனர்

அவ்விருவரும் தற்போது ஜெனரல்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

👤 Sivasankaran30 Dec 2020 11:23 AM GMT
கமல் குண்ரத்னவும் சவேந்திர சில்வாவும் ஜெனரலாகின்றனர்
Share Post

பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன, இராணுவத் தளபதியும், பாதுகாப்பு படைகளின் பதில் தலைமை அதிகாரியுமான சவேந்திர சில்வா ஆகியோர் நான்கு நட்சத்திர ஜெனரல்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னெடுத்துள்ளார்.

பாதுகாப்பு செயலாளர் 35 வருட இராணுவ சேவையின் பின்னர் ஓய்வு பெறும் போது, மேஜர் ஜெனரல் தரத்தில் இருந்ததுடன், தற்போது இராணுவத் தளபதியும், பாதுகாப்பு படைகளின் பதில் தலைமை அதிகாரியுமான சவேந்திர சில்வா லெப்டினன் ஜெனரல் தரத்திலும் உள்ளனர். இந்நிலையிலேயே அவ்விருவரும் தற்போது ஜெனரல்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.