Home » சட்டம் & அரசியல் » கூட்டமைப்பின் யோசனைக்கு சரத் வீரசேகர கண்டனம்

கூட்டமைப்பின் யோசனைக்கு சரத் வீரசேகர கண்டனம்

வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைந்த தனிப்பிராந்தியமாக இருக்க வேண்டும்

👤 Sivasankaran31 Dec 2020 6:19 AM GMT
கூட்டமைப்பின் யோசனைக்கு சரத் வீரசேகர கண்டனம்
Share Post

"இலங்கையில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகளின் தமிழீழக் கனவுடன் தொடர்ந்து செயற்பட்டுவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர்கள் குழுவுக்குச் சமர்ப்பித்துள்ள யோசனைகளில் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைந்த தனிப்பிராந்தியமாக இருக்க வேண்டும் என்ற யோசனையை அரசு தூக்கிக் குப்பையில் வீச வேண்டும்." என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சருமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் கூட்டமைப்பின் யோசனைகளில் எதுவும் முழுமையாக ஏற்றுக்கொள்ளக்கூடிய யோசனை அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.