Home » சட்டம் & அரசியல் » கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இராணுவ அதிகாரிகள் நியமனம்!

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இராணுவ அதிகாரிகள் நியமனம்!

ஜனாதிபதி செயலகத்தினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.

👤 Sivasankaran2 Jan 2021 9:48 AM GMT
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இராணுவ அதிகாரிகள் நியமனம்!
Share Post

கொரோனா பரவல் கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்களை வலுவூட்டும் நோக்கில், 25 மாவட்டங்களுக்கும் மாவட்ட இணைப்பதிகாரிகளாக, மூத்த இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவசர தேவையை கருத்திற்கொண்டு, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான, ஜெனரல் சவேந்திர சில்வாவின் ஆலோசனைக்கமைய, ஜனாதிபதி செயலகத்தினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பேச்சாளர், பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ள குறித்த நியமனங்களுக்கான நியமனக் கடிதங்கள், நேற்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவினால் வழங்கப்பட்டன.