Home » சட்டம் & அரசியல் » போர்க்குற்றங்களில் இராணுவம் ஈடுபடவில்லை: ஜெனரல் கமல் குணரத்ன

போர்க்குற்றங்களில் இராணுவம் ஈடுபடவில்லை: ஜெனரல் கமல் குணரத்ன

எமக்கு எந்தவொரு அச்சமும் இல்லை என்றார்.

👤 Sivasankaran2 Jan 2021 9:55 AM GMT
போர்க்குற்றங்களில் இராணுவம் ஈடுபடவில்லை: ஜெனரல் கமல் குணரத்ன
Share Post

போர்க்குற்றங்களில் இராணுவம் ஈடுபடவில்லை என பாதுகாப்பு செயலர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஐ.நா மனித உரிமை சபையின் மார்ச் மாத தொடரை மையப்படுத்தி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு முதல் எமது இராணுவத்திற்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட வருகின்றன. நாம் படுகொலைகளில் ஈடுபட்ட இராணுவம் கிடையாது. மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவம் ஆகும். எமக்கு எந்தவொரு அச்சமும் இல்லை என்றார்.