Home » சட்டம் & அரசியல் » ஜோ பைடன் பனிப்போர் கொள்கையை முடிவுக்கு கொண்டு வருவார் - சீனா நம்பிக்கை

ஜோ பைடன் பனிப்போர் கொள்கையை முடிவுக்கு கொண்டு வருவார் - சீனா நம்பிக்கை

தவறான கருத்தை அடிப்படையாக கொண்ட அமெரிக்காவின் கொள்கை முற்றிலும் தவறானது.

👤 Sivasankaran3 Jan 2021 2:04 PM GMT
ஜோ பைடன் பனிப்போர் கொள்கையை முடிவுக்கு கொண்டு வருவார் - சீனா நம்பிக்கை
Share Post

ஜோ பைடன் டிரம்பின் பனிப்போர் கொள்கையை முடிவுக்கு கொண்டு வந்து இருநாடுகள் இடையிலான இயல்பான உறவை மீட்டெடுப்பார் என சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

"சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்கா- சீனா உறவுகள் முன்னோடி இல்லாத வகையில் சிக்கல்களில் சிக்கியுள்ளன. அடிப்படையில் இவை அனைத்தும் சீனாவை பற்றிய அமெரிக்காவின் கொள்கை வகுப்பாளர்களின் தவறான கருத்துக்களால் வந்துள்ளன. சீனாவை மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று கூறும் தவறான கருத்தை அடிப்படையாக கொண்ட அமெரிக்காவின் கொள்கை முற்றிலும் தவறானது.

எனினும் அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தால் இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. புதிய நிர்வாகம் விவேகமான அணுகுமுறைக்கு திரும்பும்; சீனாவுடனான உரையாடலை மீண்டும் தொடங்கும்; இருதரப்பு உறவுகளுக்கு இயல்பு நிலையை மீட்டெடுக்கும்; ஒத்துழைப்பை மீண்டும் தொடங்கும் என்ற நம்பிக்கை உள்ளது." என்று சீன வெளியுறவு மந்திரி வாங் யி கூறினார்.