Home » சட்டம் & அரசியல் » 'நாகராஜ சாக்ய புத்ர ஞாதி' மருத்துவ காப்புறுதி திட்டம் அறிமுகம்

'நாகராஜ சாக்ய புத்ர ஞாதி' மருத்துவ காப்புறுதி திட்டம் அறிமுகம்

2,000 ரூபாய் வருடாந்தம் செலுத்தப்பட வேண்டியதுடன், அது புண்ணிய நிகழ்வு ஒன்றின் போது பக்தர்களினால் வழங்கப்படலாம்.

👤 Sivasankaran8 Jan 2021 12:39 PM GMT
நாகராஜ சாக்ய புத்ர ஞாதி மருத்துவ காப்புறுதி திட்டம் அறிமுகம்
Share Post

சிறிலங்கா காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் 'நாகராஜ சாக்ய புத்ர ஞாதி' மருத்துவ காப்புறுதி திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் இன்று (ஜனவரி, 8) இடம்பெற்றது.

புதிய காப்புறுதி திட்டத்தை அறிமுகப்படுத்தி பிரதமர் மஹா சங்கத்தினருக்கு காப்புறுதி பத்திரங்களை வழங்கிவைத்தார். இத்திட்டத்திற்கமைய மஹா சங்கத்தினரின் தாய், தந்தை, சகோதர சகோதரிமார் அரச வைத்தியசாலை அல்லது தனியார் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் போது நாளொன்றுக்கு 1,000 ரூபாய் வீதம் அதிகபட்சம் 15,000 ரூபாய் மற்றும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனை அல்லது ஒளடதங்களுக்காக அதிகபட்சம் 25,000 ரூபாய் வரை செலுத்தப்படும்.

இதற்காக 2,000 ரூபாய் வருடாந்தம் செலுத்தப்பட வேண்டியதுடன், அது புண்ணிய நிகழ்வு ஒன்றின் போது பக்தர்களினால் வழங்கப்படலாம். இக் காப்புறுதி வாய்ப்பு எதிர்காலத்தில் பிற மதத் தலைவர்களுக்காகவும் செயற்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் சாசனத்திற்கு பிள்ளைகளை தியாகம் செய்த, வீடற்ற பெற்றோருக்கு வீடு பெற்றுக் கொடுக்கும் ´மிஹிது நிவாச´ வீடமைப்பு திட்டத்திற்கு வீடமைப்பு அமைச்சர் என்ற வகையில் பிரதமர் இதுவரையிலும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்த கொழும்பு புதிய கோரளை மற்றும் தொட்டமுனையின் தலைமை சங்கநாயக்கர் அதிவணக்கத்திற்குரிய திவியாகஹ யசஸ்ஸி தேரர், புத்தசாசனத்திற்கான இச்சேவை தொடர்பில் பிரதமருக்கு பாராட்டு தெரிவித்தார்.