Home » சட்டம் & அரசியல் » யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூறுவதற்கு பொதுத் தூபி அமைக்கப்பட வேண்டும்

யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூறுவதற்கு பொதுத் தூபி அமைக்கப்பட வேண்டும்

எந்தளவு அவமானத்தையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் என்பதை இந்தச் சம்பவமும் வெளிப்படுத்தியுள்ளது என்றார்.

👤 Sivasankaran9 Jan 2021 4:35 PM GMT
யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூறுவதற்கு பொதுத் தூபி அமைக்கப்பட வேண்டும்
Share Post

யுத்தத்தின் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதற்கு பொதுவான நினைவு தூபி அவசியம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ். பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி நேற்று இடித்தழிக்கப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

உரிய அனுமதி பெறப்படாமல் சட்டத்திற்கு முரணாக அமைக்கப்பட்ட காரணத்தினாலேயே குறித்த தூபி இடிக்கப்பட்டதாக யாழ். பல்கலைக் கழக துணைவேந்தர் வெளியிட்டுள்ள கருத்தை சுட்டிக் காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீண்ட காலத் திட்டமிடல் இன்றி குறுகிய காலச் சிந்தனையுடன் மேற்கொள்கின்ற தீர்மானங்கள் எந்தளவு அவமானத்தையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் என்பதை இந்தச் சம்பவமும் வெளிப்படுத்தியுள்ளது என்றார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதற்கான பொதுவான தூபி அமைக்கப்பட வேண்டும் என்று தனிநபர் பிரேரணை கொண்டு வந்ததை சுட்டிக் காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் பிரதிநிதிகளின் போதிய ஒத்துழைப்பு இன்மையினால் தொடர்ந்தும் முன்னெடுக்க முடியவில்லை என்றும் கூறினார்.