Home » சட்டம் & அரசியல் » நினைவுத் தூபி இடிக்கப்பட்டமைக்கும், இராணுவத்திற்கும் தொடர்பு கிடையாது: சவேந்திர சில்வா

நினைவுத் தூபி இடிக்கப்பட்டமைக்கும், இராணுவத்திற்கும் தொடர்பு கிடையாது: சவேந்திர சில்வா

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டமைக்கும், இராணுவத்திற்கும்...

👤 Sivasankaran10 Jan 2021 8:18 AM GMT
நினைவுத் தூபி இடிக்கப்பட்டமைக்கும், இராணுவத்திற்கும் தொடர்பு கிடையாது: சவேந்திர சில்வா
Share Post

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டமைக்கும், இராணுவத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நினைவுத் தூபி இடிக்கப்பட்டமையானது, பல்கலைக்கழக நிர்வாகத்தின் தீர்மானம். இந்த விடயத்திற்கும் இராணுவத்திற்கும் தொடர்பு கிடையாது, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாம் இவ்விடயத்தில் தலையிட போவதில்லை எனவும் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்திற்குள் அமைதியின்மை ஏற்பட்டு, அதனைக் காவல்துறையால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாத பட்சத்தில் மாத்திரமே, தம்மால் அந்த விவகாரத்தில் தலையிட முடியும் என்றும் குறிப்பிட்டார்.