Home » சட்டம் & அரசியல் » இந்தியா, சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகின்றது: நளின் டி சில்வா

இந்தியா, சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகின்றது: நளின் டி சில்வா

இந்தியா இலங்கைக்கு கொரோனா தடுப்பூசியை வழங்குகிறதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

👤 Sivasankaran12 Jan 2021 10:46 AM GMT
இந்தியா, சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகின்றது: நளின் டி சில்வா
Share Post

இந்தியா, சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக மியான்மருக்கான சிறிலங்காவின் தூதுவர் பேராசிரியர் நளின் டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.

1980 களின் பிற்பகுதியில் இந்தியாவின் உத்தரவின் பேரில் இயற்றப்பட்ட அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவேண்டும் என்பதற்கு ஈடாகவே இந்தியா இலங்கைக்கு கொரோனா தடுப்பூசியை வழங்குகிறதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒருபோதும் நடக்காத ஒரு கற்பனையான இனப்படுகொலையை பிரசாரம் செய்வதன் மூலம் கனடாவும், இங்கிலாந்தும் இன அடிப்படையிலான பிளவுகளுக்கு உதவுகின்றன.

கொரோனா தடுப்பூசிகளுக்கு ஈடாக, 13வது திருத்தம் தொடர்பாக இந்தியாவின் கோரிக்கைகளுக்கு இடம் தரக் கூடாது என்றும் நளின் டி சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.