Home » சட்டம் & அரசியல் » மாணவ சமூதாயத்தின் பலம் நிரூபிக்கப்படுள்ளது

மாணவ சமூதாயத்தின் பலம் நிரூபிக்கப்படுள்ளது

வட கிழக்கில் உள்ள அனைத்து மக்களுக்கும் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

👤 Sivasankaran12 Jan 2021 10:52 AM GMT
மாணவ சமூதாயத்தின் பலம் நிரூபிக்கப்படுள்ளது
Share Post

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடக்கு - கிழக்கில் கதவடைப்பு வெற்றியடைந்துள்ளமை குறித்து வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இரா.சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், ´குறுகிய கால அவகாசத்தில் விடுக்கப்பட்ட பூரண கதவடைப்புக்கு மாபெரும் அதரவு வழங்கியமைக்கு வட கிழக்கில் உள்ள அனைத்து மக்களுக்கும் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இன்றைய தினம் மாணவ சமூதாயத்தின் பலம் இன்னொருமுறை நிருபிக்கப்படுள்ளது. இது பலருக்கும் பாடம் புகட்டியுள்ளது. எமது ஒற்றுமையே எமது பலம். ´எமது உரிமை எமது உணர்வு.´

பாராளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுப் பரம்பல் அச்சம் காரணமாக நான் சுய தனிமைப்படுதலுக்கு உட்பட்டுள்ளேன். இதன் காரணமாக அன்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்திற்கு என்னால் வர முடியாததை எண்ணி மிகவும் மனம் வருந்துகின்றேன்.

அத்துடன், தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மயிலத்தமடு பண்ணையாளர்களை நேரில் சென்று பார்க்க முடியால் போய்விட்டதையும் எண்ணி வருந்துகின்றேன்.

உங்கள் பிரச்சனையை நான் ஒரு போதும் கைவிடப்போவதில்லை. நீதி கிடைக்கும் வரை தொடர்வேன்.´ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.