Home » சட்டம் & அரசியல் » போர்க் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஜனாதிபதியே வலுவான ஆதராங்களை முன்வைத்துள்ளார்

போர்க் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஜனாதிபதியே வலுவான ஆதராங்களை முன்வைத்துள்ளார்

எங்கள் ஜனாதிபதி ஒரு தகவல் தொழில்நுட்ப பட்டதாரி

👤 Sivasankaran13 Jan 2021 12:39 PM GMT
போர்க் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஜனாதிபதியே வலுவான ஆதராங்களை முன்வைத்துள்ளார்
Share Post

சிறிலங்காவில் போர்க் குற்றச்சாட்டுகள் இடம்பெற்றதாக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க ஜனாதிபதியே வலுவான ஆதாரங்களை முன்வைத்துள்ளதாக ஹெல பொது சவிய அமைப்பு எச்சரித்துள்ளது.

"எனினும் நான் இறுதியில் பிரபாகரனைக் கொன்று இழுத்து வந்தேன். அந்த நிலைக்கு கொண்டு வர முடியும். எதற்கும் தயாராக இருக்கும் ஒரு கதாப்பாத்திரம் நான்" என்று கூறிய கோட்டாபய ராஜபக்சவின் கருத்ததானது, நாட்டின் ஜனாதிபதியாக 'இல்லாத பிரச்சினைகளை வரவழைப்பது' போன்றது என ஹெல பொது சவிய அமைப்பின் தலைவர் புதுகல ஜினவன்ச தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

"இந்த கருத்து நமது ஆயுதப் படைகளின் தளபதியும், நமது நாட்டின் தளபதியும் போர்க்குற்றங்களைச் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ஒரு வலுவான சான்றாகும்.

எங்கள் ஜனாதிபதி ஒரு தகவல் தொழில்நுட்ப பட்டதாரி, இதுபோன்ற விடயங்களை இன்று எந்த மொழியிலும் மொழிபெயர்க்க முடியும் என்பதை அறிவார்."

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஜனாதிபதியின் உரை முன்வைக்கப்பட்டால் இது இல்லாத பிரச்சினையை தோற்றுவிக்கும் விடயமாக மாறும்.

தமிழ்ப் புலம்பெயர்ந்தோருக்கு இது மற்றொரு விதை. முப்படையினர் போர்க் குற்றங்களை இழைத்தனர் என்பதை நிரூபிப்பதற்கான சாட்சி இது."

எந்தவொரு விவேகமுள்ள ஆட்சியாளரும் இத்தகைய அறிக்கையை வெளியிடக்கூடாது என்பதை சுட்டிக்காட்டியுள்ள அந்த அமைப்பு, அரச தலைவர் தனக்கு அறிவுரை கூறும் ஆலோசகர்கள், விழாக்களுக்கு உரைகள் எழுதுபவர்களை உடனடியாக நீக்கி, பொருத்தமானவர்களை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளது.