Home » சட்டம் & அரசியல் » சிறிலங்கா எதிர்ப்புத் தெரிவித்தாலும், அதனை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

சிறிலங்கா எதிர்ப்புத் தெரிவித்தாலும், அதனை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல் நசிஃப் தெரிவித்துள்ளார்.

👤 Sivasankaran27 Feb 2021 6:05 AM GMT
சிறிலங்கா எதிர்ப்புத் தெரிவித்தாலும், அதனை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
Share Post

மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்குச் சிறிலங்கா எதிர்ப்புத் தெரிவித்தாலும், அதனை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த தகவலை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல் நசிஃப் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரது அறிக்கை தொடர்பில் சிறிலங்கா எதிர்ப்பினை வெளியிட்டால், ஒரு மென்மைப் போக்கான அடிப்படையிலேயே ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை இருப்பது வழமை.