Home » சட்டம் & அரசியல் » சிரியா வான் தாக்குதல் ஈரானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - ஜோ பைடன்

சிரியா வான் தாக்குதல் ஈரானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - ஜோ பைடன்

பயங்கரவாத குழுக்களின் ஆதரவுக்கு விளைவுகளை ஏற்படுத்தும்

👤 Sivasankaran28 Feb 2021 5:30 AM GMT
சிரியா வான் தாக்குதல் ஈரானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - ஜோ பைடன்
Share Post

சிரியாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதல் ஈரானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.

ஜோ பைடன் பதிலளிக்கையில் ''சிரியாவில் அமெரிக்க வான்வழி தாக்குதலை அங்கீகரிப்பதற்கான எனது முடிவை ஈரான் பார்க்க வேண்டும். இது அமெரிக்க நலன்களை அல்லது அமெரிக்க குடி மக்களை அச்சுறுத்தும் பயங்கரவாத குழுக்களின் ஆதரவுக்கு விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.‌ நீங்கள் தண்டனை இன்றி செயல்பட முடியாது கவனமாக இருந்து கொள்ளுங்கள்'' என கூறினார்.