Home » சட்டம் & அரசியல் » சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணை தோற்கடிக்கப்படும். - அமைச்சர் கெஹலிய

சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணை தோற்கடிக்கப்படும். - அமைச்சர் கெஹலிய

சிறிலங்காவுக்கு ஆதரவாக சுமார் 21 நாடுகள் கருத்துக்களை வெளியிட்டிருந்தன.

👤 Sivasankaran28 Feb 2021 5:35 AM GMT
சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணை தோற்கடிக்கப்படும்.  - அமைச்சர் கெஹலிய
Share Post

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சிறிலங்காவுக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு நிச்சயம் தோற்கடிக்கப்படும். அதில் மாற்றுக் கருத்துக்கள் எதுவும் இல்லை இவ்வாறு சிறிலங்கா அரசின் அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது அமர்வு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இலங்கை தொடர்பான விவகாரம் கடந்த 2 நாட்களாக ஆராயப்பட்டிருந்தன. இதில் சிறிலங்காவுக்கு ஆதரவாக சுமார் 21 நாடுகள் கருத்துக்களை வெளியிட்டிருந்தன.

சில நாடுகள் நடுநிலைப் போக்கை வெளியிட்டிருந்தன. 15 நாடுகள் எதிர்த்திருந்தன. இந்தநிலையில் இது தொடர்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.