Home » சட்டம் & அரசியல் » வவுணதீவில் துப்பாக்கியுடன் இருவர் கைது

வவுணதீவில் துப்பாக்கியுடன் இருவர் கைது

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

👤 Sivasankaran10 Jun 2021 12:48 PM GMT
வவுணதீவில் துப்பாக்கியுடன் இருவர் கைது
Share Post

மட்டக்களப்பு - வுவுணதீவு பிரதேசத்தில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் இருவரை கைது செய்துள்ளதுடன், இரு துப்பாக்கிகளை மீட்டுள்ளதாக வவுணதீவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விசேடப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய காவல்துறையினர் வவுணதீவு காவல் பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை மற்றும் நெல்லிக்காடு ஆகிய இரு பிரதேசங்களில் உள்ள வீடுகளை சுற்றிவளைத்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர்த் தயாரிப்பு துப்பாக்கியுடன் இருவரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.