Home » சட்டம் & அரசியல் » சிறிலங்காவில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் தீர்மானம்

சிறிலங்காவில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் தீர்மானம்

27 பன்னாட்டுப் பிரகடனங்களை அமல்படுத்தல் ஆகிய நிபந்தனைகளுக்கு உட்பட்டே இந்த சலுகை வழங்கப்பட்டது.

👤 Sivasankaran11 Jun 2021 12:24 PM GMT
சிறிலங்காவில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் தீர்மானம்
Share Post

சிறிலங்காவில் பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரி ஐக்கிய ஒன்றிய நாடாளுமன்றில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக 628 வாக்குகளும், எதிராக 15 வாக்களும் அளிக்கப்பட்டதுடன் 40 உறுப்பினர்கள் வாக்களிப்பில் பிரசன்னமாகவில்லை.

சிறிலங்காவில் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்து செல்வதாகவும் அண்மையில் ஐக்கிய நாடுகள் அமைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை பதிலீடு செய்தல், மனித உரிமை விவகாரங்கள் உள்ளிட்ட 27 பன்னாட்டுப் பிரகடனங்களை அமல்படுத்தல் ஆகிய நிபந்தனைகளுக்கு உட்பட்டே இந்த சலுகை வழங்கப்பட்டது.

சிறிலங்காவில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஓர் வழியாக இந்த சலுகைத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு தீர்மானம் நிறைவேற்றிய உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

சிறிலங்காவுக்குத் தற்காலிக அடிப்படையில் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை இடைநிறுத்தக் கூடிய சாத்தியங்கள் உண்டா என்பதனை உன்னிப்பாக மதிப்பீடு செய்யுமாறும் கோரியுள்ளனர்.