Home » சட்டம் & அரசியல் » சிறிலங்கா சுற்றுலாப் பயணிகள் பிரான்சிற்கு வர தடை

சிறிலங்கா சுற்றுலாப் பயணிகள் பிரான்சிற்கு வர தடை

16 நாடுகளில் சிறிலங்காவும் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

👤 Sivasankaran11 Jun 2021 12:25 PM GMT
சிறிலங்கா சுற்றுலாப் பயணிகள் பிரான்சிற்கு வர  தடை
Share Post

கோவிட் - 19 அச்சுறுத்தல் காரணமாக சிறிலங்காச் சுற்றுலாப் பயணிகள் பிரான்சிற்கு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள பிரெஞ்சு தூதரகம் தெரிவித்துள்ளது.

24 மணி நேரத்திற்குள் பிரான்ஸ் வழியாகச் செல்லும் சிறிலங்கா மக்கள், சிறிலங்கா இராஜதந்திரிகள், மாணவர்கள், பிரான்சில் அவசர மருத்துவ சிகிச்சை பெற விரும்பும் சிறிலங்கா நோயாளிகள், உயர்மட்ட விளையாட்டு வீரர்கள் மட்டுமே பிரான்சிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

கோவிட் - 19 தொற்று அச்சுறுத்தல் காரணமாக பிரான்ஸில் சிவப்பு பட்டியலிடப்பட்ட 16 நாடுகளில் சிறிலங்காவும் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிவப்பு பட்டியலிடப்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் பிரான்சிற்கு வருகை தர அனுமதிக்கக் கடுமையான நிபந்தனைகள் பொருந்தும் என்று தூதரகம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.