Home » சட்டம் & அரசியல் » அமைச்சர் பதவியால் சரத் வீரசேகர ஏமாற்றம்

அமைச்சர் பதவியால் சரத் வீரசேகர ஏமாற்றம்

பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியால் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளது.

👤 Sivasankaran3 Aug 2021 7:02 AM GMT
அமைச்சர் பதவியால் சரத் வீரசேகர ஏமாற்றம்
Share Post

பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியால் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சரத் வீரசேகர தனக்கு வேறு அமைச்சுப் பொறுப்பை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோர பல முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், அவருக்கு அதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று வட்டாரங்கள் கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரத் வீரசேகரவிடம் பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஒப்படைத்தபோது, அதில் ஐந்து நிறுவனங்கள் இருந்தன, தற்போது அவற்றில் மூன்று நிறுவனங்கள் அவரிடம் இருந்து நீக்கப்பட்டுள்ளன.