Home » சட்டம் & அரசியல் » இராணுவம் வசமிருந்த காணிகள் உரிமையாளரிடம் ஒப்படைப்பு

இராணுவம் வசமிருந்த காணிகள் உரிமையாளரிடம் ஒப்படைப்பு

மட்டக்களப்பு - கும்புறுமுலை பகுதியில் நீண்டகாலமாக இராணுவமுகாம் அமையப்பெற்றிருந்த சுமார் 12 ஏக்கர்...

👤 Sivasankaran4 Aug 2021 3:09 PM GMT
இராணுவம் வசமிருந்த காணிகள் உரிமையாளரிடம் ஒப்படைப்பு
Share Post

மட்டக்களப்பு - கும்புறுமுலை பகுதியில் நீண்டகாலமாக இராணுவமுகாம் அமையப்பெற்றிருந்த சுமார் 12 ஏக்கர் காணி இன்று உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாவட்ட அரசாங்க அதிபருடன் இணைந்து குறித்த காணியை உரிமையாளரிடம் கையளித்திருந்தார்.