Home » சட்டம் & அரசியல் » நார்வேயில் வில் அம்புகளை எய்து பலர் கொலை செய்யப்பட்டனர்

நார்வேயில் வில் அம்புகளை எய்து பலர் கொலை செய்யப்பட்டனர்

இதில் ஏராளமான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

👤 Sivasankaran14 Oct 2021 11:32 AM GMT
நார்வேயில் வில் அம்புகளை எய்து பலர் கொலை செய்யப்பட்டனர்
Share Post

நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் தென்மேற்கில் காங்ஸ்பெர்க் (Kongsberg) நகரில் வில், அம்புடன் வந்த ஒரு மனிதர் மக்கள் மீது அம்புகள் எய்தி தாக்கியுள்ளார். மேலும், அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

இதில் ஏராளமான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், காவல்துறையினர் இறந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிடவில்லை. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்திய மனிதரைக் காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.