Home » சட்டம் & அரசியல் » பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ்க்கு கொரோனா தொற்று உறுதி

பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ்க்கு கொரோனா தொற்று உறுதி

அரசு முறை பயணமாகப் பெல்ஜியமுக்கு சென்றுவிட்டு, நாடு திரும்பிய நிலையில் ஜீன் காஸ்டெக்ஸ் கொரோனா...

👤 Sivasankaran24 Nov 2021 3:11 PM GMT
பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ்க்கு கொரோனா தொற்று உறுதி
Share Post

அரசு முறை பயணமாகப் பெல்ஜியமுக்கு சென்றுவிட்டு, நாடு திரும்பிய நிலையில் ஜீன் காஸ்டெக்ஸ் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். முன்னதாக அவர் நேற்று முன்தினம் பெல்ஜியமில் இருந்து திரும்பிய சில மணி நேரங்களில் அவரது மகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து, ஜீன் காஸ்டெக்ஸ் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதை தொடர்ந்து அவர் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். அடுத்த 10 நாட்களுக்கு அவர் வீட்டில் இருந்தபடியே தனது பணிகளை மேற்கொள்வார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.