Home » சட்டம் & அரசியல் » பழியை எம் மீது போடாதீர் - அரசாங்கம்

பழியை எம் மீது போடாதீர் - அரசாங்கம்

ரிஷாட் பதியூதீன் மற்றும் இம்ரான் மஹ்ரூப் ஆகியோர் முன்வைத்த கருத்துக்களுக்கு பதில் அளித்து உரையாற்றிய போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

👤 Sivasankaran24 Nov 2021 3:30 PM GMT
பழியை எம் மீது போடாதீர் - அரசாங்கம்
Share Post

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா ஆற்றில் ஏற்பட்ட படகு விபத்தை அரசியலாக்கி, அரசாங்கம் மீது பழி போடுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை கண்டிப்பதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ (Johnston Fernando) தெரிவித்துள்ளார்.

விபத்துக்கு காரணமான படகுப் பாதை சேவையை முன்னெடுப்பதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆளுகைக்கு உட்பட்ட கிண்ணியா நகர சபையே அனுமதி வழங்கியதாக ரிஷாட் பதியூதீன் மற்றும் இம்ரான் மஹ்ரூப் ஆகியோர் முன்வைத்த கருத்துக்களுக்கு பதில் அளித்து உரையாற்றிய போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.