Home » சட்டம் & அரசியல் » சாலமன் தீவுகளில் வன்முறை

சாலமன் தீவுகளில் வன்முறை

பிரதமர் மானசே சோகவரேவை பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

👤 Sivasankaran25 Nov 2021 2:29 PM GMT
சாலமன் தீவுகளில் வன்முறை
Share Post

சாலமன் தீவுகள் நாட்டின் பிரதமர் மானசே சோகவரே தைவானுடனான தூதரக உறவை துண்டித்துவிட்டு, சீனாவுடன் தூதரக உறவை ஏற்படுத்தினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

பிரதமர் மானசே சோகவரேவை பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று தலைநகர் ஹோனியாராவில் உள்ள நாடாளுமன்றம் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

காவல்துறையினர்அவர்களை விரட்டியடிக்க முயன்றதால் இருதரப்புக்கும் இடையில் மோதல் வெடித்தது. பின்னர் இந்த மோதல் பெரும் வன்முறையாக வெடித்தது.

இதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்துக்கும், அதன் அருகில் உள்ள ஒரு காவல் நிலையத்துக்கும் தீவைத்தனர்.