
உரம் வழங்குவது தொடர்பாக இந்திய அதிகாரிகளிடம் இருந்து சிறிலங்காவுக்கு உத்தரவாதம் கிடைத்துள்ளது. உர விவகாரம் தொடர்பாக சிறிலங்கா உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட வெள்ளிக்கிழமை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
"சிறிலங்காவில் நடப்பு யாலா பயிர்ச்செய்கைப் பருவத்திற்குத் தேவையான யூரியாவை வழங்குவது குறித்து ஆலோசிப்பதற்காக, புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய உரத் திணைக்களத்தின் செயலாளர் ஸ்ரீ ராஜேஷ் குமார் சதுர்வேதியை இன்று (12) சந்தித்தார். தற்போதுள்ள ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் கீழ், நடப்பு யாலா பயிர்ச்செய்கைப் பருவத்தில் நெல்லுக்கான மொத்தத் தேவையான 65,000 மெட்ரிக் தொன் யூரியாவை உடனடியாக சிறிலங்காவுக்கு வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்து இந்த சந்திப்பு இடம்பெற்றது. சிறிலங்கா உயர்ஸ்தானிகராலயம் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.