
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது மூன்று கால் விரல்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மருத்துவர்களின் சிகிச்சையில் அவர் நலமுடன் இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது, அவரது காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை என்று கூறி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் காலின் மூன்று விரல்களை அகற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது.
"நீண்டகால சர்க்கரை வியாதியால் தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் வலது காலின் கால் விரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் உடல் நலம் தேறி வருகிறார். எனவே கட்சியினர், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தேமுதிக தெரிவித்துள்ளது.