
பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு பதிவுகள் மற்றும் கட்டுரைகளை வெளியிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞர் செயற்பாட்டாளர் அனுருத்த பண்டாரவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி சாலிய பீரிஸ், தனது கட்சிக்காரருக்கு எதிராக உரிய குற்றச்சாட்டை தொடர முடியாது என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இதன்படி, அவரை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.
காவல்துறை மற்றும் பாதுகாப்பு சட்டத்தரணியின் சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா சந்தேக நபரை விடுதலை செய்வதாக தனது உத்தரவை பிறப்பித்துள்ளார்.