
காலி முகத்திடலில் கூடாரங்கள் மற்றும் தற்காலிக தங்குமிடங்களை ஆக்கிரமித்துள்ளவர்களை ஆகஸ்ட் 05 ஆம் திகதி மாலை 5.00 மணிக்குள் அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு கொழும்பு கோட்டை காவல்துறையினர் மீண்டும் அறிவித்துள்ளனர்.
சட்ட அமலாக்க அதிகாரிகள் நேற்று (03) இந்த அறிவிப்பை வெளியிட்டதுடன், அறிவுறுத்தல்களுக்கு இணங்கத் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேலும் வலியுறுத்தியது.
அந்த அறிவிப்பில், காலி முகத்திடலில் இருப்பவர்கள், நாட்டின் சட்டத்திற்கு இணங்க, பொதுமக்களை ஒடுக்காமல் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.